Type to search

மரணத்திலும் பிரியாத அபூர்வ சகோதரர்கள்!: மனதை உலுக்கும் உண்மைக்கதை…

GOSSIP Gossip Head Line Gossip Top Story Local Gossip

மரணத்திலும் பிரியாத அபூர்வ சகோதரர்கள்!: மனதை உலுக்கும் உண்மைக்கதை…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கடந்த வெள்ளியன்று கடலுக்குச் சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீனவர்களின் சடலங்கள் 5 நாட்களின் பின் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மதியம் யாழ். புங்குடுத்தீவு கடற்கரையில் மீட்கப்பட்டன.  Manner Fishermen Brothers

தலைமன்னார் மேற்குக் கிராமத்தில் வசிக்கும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது௩2) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது- 37) ஆகிய இருவரும், கடந்த வெள்ளிக்கிழமை காலை கடலில் போடப்பட்ட நண்டு வலையைக் கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், எதிர்பாரத விதமாக கடலில் மூழ்கிய அவர்கள் இருவருடைய சடலங்களும், புங்குடுத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கின.

இதனையடுத்து, வைத்திய பரிசோதனைகளின் பின்னர் மரணம் அடைந்த இரு சகோதரர்களின் சடலங்கள் சொந்த இடமான தலைமன்னார் பகுதிக்கு நேற்றுக் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மரணத்தில் கூட இணைபிரியாமல் இறந்த இரு சகோதர்களுடைய நல்லடக்கத்தில் ஒட்டு மொத்த தலைமன்னார் சமூகமே ஒன்று திரண்டு கண்ணீர் சிந்தி வழி அனுப்பி வைத்தது


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like