Type to search

வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்

GOSSIP Gossip Head Line Gossip Top Story Local Gossip

வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்

Share
  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    37
    Shares

வீடுகளில் நித்திரையில் இருந்த பெண்களை தடவி வந்த நபரொருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹரகம பொலிஸ் பிரிவிலேயே இச்சம்பவம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 15 நாட்களாக அதிகாலை 2, 3 மணியளவில், பல கிராமங்களில் உள்ள இல்லங்களில் நித்திரை கொண்டிருக்கும் இளம் பெண்களின் உடம்பை நபரொருவர் வருடி வந்துள்ளார்.

காமுகர்களை கைது செய்வதற்கு இந்நாள் வரை பொலிஸாருக்கு இயலாதுள்ளதினால் இரவு வேளைகளில் நித்திரை கொள்ளாது பீதியில் கழிப்பதாக இளம் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

மஹரகமை பொலிஸார் தம்மிடமிருந்து முறைப்பாடு ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தங்களிடமிருந்து தொலைபேசி எண்களை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பின்பு மாலை இல்லங்களுக்கு வந்து விசாரணை செய்வதாக கூறியதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் இந்த முறைபாட்டை ஒரு பொலிஸ் உத்தியோகத்தரிடம் கூறியபோது “உடம்பை வருடினால் ஒன்றும் நடக்காது தானே” என்று ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கூறியதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காமுகன்களுக்கு பாதுகாப்பு அளிப்பது இந்த பொலிஸ் உத்தியோகத்தராக இருக்குமோ என தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் பற்றி மஹரகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவியபோது பொலிஸ் நிலையத்தில் இவ்வாறு புகார்களை நிராகாரிக்க முடியாது என்வும் இந்நாட்களில் இரவு நேரம் கொட்டாவை பொலிஸாருடன் இணைந்து விசாரணை நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் பல குற்றவாளிகளை கைது செய்வதற்கு இயலாதுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    37
    Shares