Type to search

இந்தியாவில் கட்டிய மனைவியை கடத்த முயற்சித்த கணவன்!

GOSSIP Gossip Head Line World Gossip

இந்தியாவில் கட்டிய மனைவியை கடத்த முயற்சித்த கணவன்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னை போரூரில் கஞ்சாவுடன் சிக்கிய இளம் பெண்ணை தொழில் போட்டி காரணமாக அவரது கணவரே கடத்த முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. போரூர் காரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டுள்ளது. இதை அடுத்து காரை வழிமறித்த பொதுமக்கள், குறித்த பெண்ணை மீட்டனர். அதன்போது உடன் இருந்த நபர் ஒருவரும் காரில் இருந்து மீட்கப்பட்டார். India husband try_to smuggled wife tamil news

அதன்போது அந்தப் பெண்ணின் முகத்தில் கைக் காப்பை வைத்து குத்தி காயப்படுத்திவிட்டு கடத்தல்காரர்கள், காரில் தப்பிச் சென்று விட்டனர். தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற போரூர் பொலிஸார் பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில் அந்தப் பெண் ஆந்திர மாநிலம் சிக்காகுளத்தைச் சேர்ந்த ரேணுகா என்பதும், உடனிருந்த நபர் நிர்மல் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பொலிஸாருக்கு வந்த செல்போன் அழைப்பில் ரேணுகாவின் சூட் கேசில் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சூட்கேசை சோதனை செய்த போது 33 கிலோ கஞ்சா பிடிபட்டது.

இதையடுத்து நிர்மலை கைது செய்த பொலிஸார் மருத்துவமனையில் உள்ள ரேணுகாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ரேணுகா சோளிங்கநல்லூரைச் சேர்ந்த ரவுடி தேவசகாயம் என்பவரைத் திருமணம் செய்து கஞ்சா தொழிலுக்கு உதவி வந்ததாகவும், அப்போது தனியாக தொழில் செய்யலாம் என நிர்மல் கூறியதைக் கேட்டு கஞ்சா கடத்தி விற்று வந்ததாகவும் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது மனைவியே தனது தொழிலுக்கு போட்டியாக வந்து விட்ட ஆத்திரத்தில் இருந்த தேவசகாயம், ஆட்களை வைத்து மனைவி ரேணுகாவை கடத்த முயற்சித்து இருப்பதாக கூறியுள்ள பொலிஸார், கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வீட்டுக்கு வந்த டிடியை இப்படியா கேவலபடுத்துறது : தர்ம சங்கடத்தில் டிடி
புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: