Type to search

கடந்த வருஷம் 14, இந்த வருஷம் 20 கிலோ தங்கத்துடன் உலா வரும் கோல்டன் பாபா- யார் அந்த குடுத்து வச்ச சிஷ்யனோ???

GOSSIP Gossip Head Line World Gossip

கடந்த வருஷம் 14, இந்த வருஷம் 20 கிலோ தங்கத்துடன் உலா வரும் கோல்டன் பாபா- யார் அந்த குடுத்து வச்ச சிஷ்யனோ???

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத்தில் கோல்டன் பாபா தனது உடல் முழுவதும் 20 கிலோ நகைகள், 21 சொகுசு கார்கள், பாதுகாப்புக்கு பவுன்சர்கள் குழு என பரபரப்பாக வலம் வருகிறார். Golden baba travel withh 20Kg gold tamil news

காசியாபாத்தில் உள்ள சுதீர் மக்கார் என்கிற கோல்டன் பாபா, கன்வர் யாத்திரையில் ஆண்டுதோறும் கலந்து கொள்வது வழக்கம். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவர், காவ்முக், கங்கோத்ரி, பீகாரில் உள்ள சுல்தான்கஞ்ச் போன்ற இடங்களில் இருந்து கங்கை நீரை எடுத்து வரும் நிகழ்ச்சி கன்வர் யாத்திரையாகும்.

இந்த யாத்திரையில் கலந்து கொள்வதற்காக டெல்லி- மீரட் சாலையில் உள்ள ரிசார்ட்டில் கோல்டன் பாபா (58) தங்கியிருந்தார். அவர் 20 கிலோ தங்க நகைகள், 21 சொகுசு கார்கள், பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய போலீஸார், பவுன்சர்கள் குழு என வலம் வந்தார்.

இதுகுறித்து கோல்டன் பாபா கூறுகையில், கடவுளின் கிருபையால் என்னிடம் உள்ள தங்கம் அதிகரித்து வருகிறது. எனது உடல்நிலை ஒத்துழைத்தால் இந்த யாத்திரையை இனி தொடர்வேன். எனக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலி உள்ளது.

மும்பையில் உள்ள மருத்துவமனை உள்பட ஏராளமான சிறந்த மருத்துவமனைகளில் காண்பித்து விட்டேன். என் பிரச்சினை இதுவரை தீரவில்லை. கடந்த ஆண்டு நான் 14 கிலோ நகை அணிந்து வந்தேன், இந்த ஆண்டு 20 கிலோ தங்கம் அணிந்துள்ளேன்.

நான் இறக்கும் முன்பு என்னுடைய தங்கத்தை எனக்கு பிடித்த சிஷ்யரிடம் கொடுத்து விட்டுதான் இறப்பேன் என்று தெரிவித்தார் கோல்டன் பாபா. கடந்த ஆண்டு யாத்திரைக்கு கார்களையும் வாடகைக்கு எடுப்பது, டெல்லியிலிருந்து சிறந்த உணவு கலைஞரை வரவழைத்தது, தண்ணீர் புகாத டெண்டுகளை போட்டது, மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் என கிட்டதட்ட ரூ.1 . 25 கோடி செலவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தில் வலம் வரும் பாபா… யார் அந்த குடுத்து வச்ச சிஷ்யனோ???

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: