Type to search

டானியலை பெரிய மனுஷனாக்கிய கமல்- கொந்தளித்த நெட்டிசன்கள்!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line

டானியலை பெரிய மனுஷனாக்கிய கமல்- கொந்தளித்த நெட்டிசன்கள்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மொட்டை கடிதம் எழுதிய டானியல் மீது பிக்பாஸ் 2 பார்வையாளர்கள் கொலவெறியில் உள்ளனர். பிக்பாஸ் 2 வீட்டில் வைத்த புகார் பெட்டியில் கமல்ஹாஸன் பெயருக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. Bigg boss Daniel wrote letter Kamal gossip

கடிதத்தை கவரில் வைத்து எடுத்து வந்த கமலோ, போட்டியாளர்களை பார்த்து நேரடியாக எலிமினேஷனுக்கு போய்விடலாம் என்றார். அதை கேட்ட போட்டியாளர்கள், முக்கியமாக ஜனனி டென்ஷனாக இருந்தார்.

சும்மா உங்களுடன் விளையாடினேன் என்று கூறிவிட்டு பொன்னம்பலம் பற்றி தனக்கு மொட்டை கடிதம் வந்துள்ளது என்றார். அதை எழுதியது யார் என்று இப்போது நீங்களே கூறினால் அவர் பெரிய மனிதன், இல்லை என்றால் வெறும் மனிதன் என்றார். உடனே டானி அது நான் தான் சார் என்று நல்ல பிள்ளையாக கையை தூக்கினார். பொன்னம்பலம் செய்வதறியாது சிரித்து கொண்டிருந்தார்.

அந்த கடிதத்தில் “இன்னும் பெண்களை தப்பாக பேசிக்கிட்டுத் தான் இருக்கிறார் பொன்னம்பலம். என்னை பற்றி ரொம்ப தப்பா கமல் சாரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். எல்லாமே அவருடைய பொய்த்தனம். இப்பவும் அவர் தொடர்ந்து தப்பு பண்ணிக்கிட்டே தான் இருக்கிறார் என்று டானியல் எழுதியிருந்தார்.

கடிதத்தை வாசித்து காட்டிய கமல், எழுதியது உண்மையா, பொய்யா என்று கேட்க இப்போ இது பொய் என்றார் டானி. அவர் சொன்னதை கேட்டு கமல் மட்டும் அல்ல அனைவருக்குமே குழப்பம் ஏற்பட்டது. பொய் என்றால் அதை எதற்காக கடிதமாக எழுதி எங்களை சாகடிக்கிறீர்கள் டானி என்று சொல்லிவிட்டு, இனி எதற்கு இந்த கடிதம் என்று அதை தூக்கி வீசிவிட்டார் கமல்.

மொட்டை கடிதம் எழுதியதற்கு ஒரு மொக்கை விளக்கத்தை அளித்து சமாளித்தார் டானி. இப்ப என்னதான்யா சொல்ல வர்றா டானி? அனைவரின் கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என நினைக்கிறார் என்று பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறியது மிகவும் சரியே. அதை தான் மொட்டை கடிதம் மூலம் செய்துள்ளார் டானி.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பொன்னம்பலத்தை வெளியே கூட்டி செல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமல்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: