Type to search

அபிராமியின் காமக் கொலை வெறியாட்டத்துக்குத் துணை போன தொலைக்காட்சி! உச்சக் கட்ட பரபரப்பில் தமிழ்நாடு

GOSSIP Gossip Head Line Gossip Top Story World Gossip

அபிராமியின் காமக் கொலை வெறியாட்டத்துக்குத் துணை போன தொலைக்காட்சி! உச்சக் கட்ட பரபரப்பில் தமிழ்நாடு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழகத்தில் கள்ளக்காதலனுக்காக இரண்டு குழந்தைகளை கொலை செய்த தாய் அபிராமியின் அரக்க மனம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அபிராமி, தனது கணவர் நல்லவர், நான் தான் கெட்டவள். எனது குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை, இருப்பினும் காதல் எண் கண்களை மறைத்துவிட்டது என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும், திருமணத்திற்கு பின்னரும் தன்னை அழகாக வைத்துக்கொள்வதில் அதிக முனைப்புடன் இருந்த அபிராமி, தனது அழகை யாராவது புகழ்ந்துவிட்டால் அதிக சந்தோஷப்படுவாராம். ஆனால், தனது அழகை ரசிக்க வேண்டிய கணவரே அதனை கண்டுகொள்ளாத காரணத்தால், மனம் உடைந்துள்ளார். இவரின் அழகை பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்பவர் வர்ணித்த காரணத்தால் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் கள்ளக்காதலர்களாக மாறியுள்ளனர். அபிராமி தன்னுடைய பொறுப்புகளை மறந்துவிட்டதே இதற்குக் காரணம். அபிராமி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய், விஜய்க்கு மனைவி என்பதை உணர்ந்திருந்தால் இந்தத் தவறை அவர் செய்திருக்க மாட்டார்.

இந்நிலையில், தொலைக்காட்சி நாடகங்களில் காட்டப்படுவதைப் போன்ற ஒரு சம்பவமே அபிராமியின் வாழ்க்கையிலும் இடம்பெற்றிருக்கிறது. நாடகங்களில் கண்டிப்பாக கள்ளக்காதல் காட்சிகள், மாமனார் மருமகள் சண்டை, மாமியார் மருமகள் சண்டை, என்று கேவலமான காட்சிகளை சித்தரித்து மக்களுக்கு காட்டி மக்களை தப்பான வழிக்கு கொண்டு செல்லும் நாடகங்கள் இனியும் எமது வாழ்க்கைக்கு தேவை தானா? என்று சிந்திக்கும் நேரம் வந்து விட்டது. ஒட்டு மொத்த மக்களும் ஓன்று கூடினால் மட்டுமே, இவ்வாறான நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் நாடகங்களை நிறுத்த முடியும்.

Tag: India Babies Killed Mother Illegal Relationship Reason Revealed


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •