Type to search

“என் அப்பாவை பற்றி எனக்கு தெரியும் “அர்ஜுன் மீதான பாலியல் புகார் குறித்து ஐஸ்வர்யா கருத்து

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

“என் அப்பாவை பற்றி எனக்கு தெரியும் “அர்ஜுன் மீதான பாலியல் புகார் குறித்து ஐஸ்வர்யா கருத்து

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நடிகர் அர்ஜுன் மீது திட்டமிட்டு பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அவரது மகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

பெண்களுக்குத் தனிமையில் நேரும் பாலியல் தொல்லைகளைப் பொதுவெளியில் பகிர ‘Me too’ என்ற ஹேஸ்டேக் இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த ஹேஸ்டேக் மூலம் பல முக்கிய பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 2016-ம் ஆண்டு `விஸ்மயா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, அப்படத்தில் அர்ஜுனின் மனைவியாக நடித்த காட்சிகளில், “என் அனுமதி இல்லாமலேயே அர்ஜூன் என்னைக் கட்டித் தழுவினார். அத்துமீறி நடந்து கொண்டார்” என்றும் படப்பிடிப்புக்குப் பிறகு வெளியே சந்திக்க அழைத்தார் என்றும் ஸ்ருதி தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா கூறுகையில், “எதன் அடிப்படையில் என் தந்தை மீது ஸ்ருதி #MeToo புகார் கூறுகிறார். படப்பிடிப்பின் போது அத்தனை பேர் முன்னிலையில் என் தந்தை எப்படி அத்துமீறியிருக்க முடியும். அப்படி என் தந்தை தவறு செய்திருந்தால் படப்பிடிப்பின் போதே சொல்லியிருக்கலாமே.

என் தந்தை அவுட்டிங் அழைத்ததாக வேறு ஸ்ருதி சொல்கிறார். அதற்கெல்லாம் என் தந்தைக்கு ஏது நேரம். அவர் பப்புக்கோ வேறு சொகுசு விடுதிகளுக்கோ போவதே கிடையாது. என் தந்தை மீது ஸ்ருதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றது.

அதிலும், பாலியல் துன்புறுத்தல் என்பது மிகவும் வலுவான வார்த்தை. ஸ்ருதி அதைப் பயன்படுத்துவதற்கு முன் யோசித்திருக்க வேண்டும். #MeToo இயக்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால் ஸ்ருதி போன்றவர்கள் விளம்பரத்துக்காக செய்வதை ஏற்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like