புதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ
Share

(Cabinet reshuffle today)
உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் தெற்கு அரசியலில் ஏற்பட்ட குளறுபடிகளையடுத்து தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மீண்டும் 3ஆவது தடவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக தேசிய அரசாங்கத்தில் சர்ச்சைக்குரிய நபர்களான ரவி கருணாநாயக்க மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்ற விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு மாத்திரமே அமைச்சு பதவி வழங்கப்பட்டது. ரவி கருணாநாயக்கவுக்கு சுற்றுலாதுறை அமைச்சு பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லை.
அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த அமைச்சுக்கள், இரு பிரதான கட்சியின் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
புதிய அமைச்சர்கள் விபரம் இதோ,
-
- தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராக ரவீந்திர சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்
- சமூக நலன்புரி, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சராக தயா கமகே நியமனம்
- நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்
- திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவாகரம், தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமனம்
- அரச கருமமொழிகள், தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சராக மனோ கணேசன் நியமனம்
- மீள் குடியேற்றம் மற்றும்,வட மாகாண அபிவிருத்தி,இந்து விவகாரா அமைச்சராக டீ.எம்.சிவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்
- மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி, கிராமிய பொருளாதார அமைச்சராக விஜித் விஜயமுனி சொய்சா நியமனம்
- மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, விளையாட்டுத்துறை அமைச்சராக பைசர் முஸ்தபா நியமனம்
- பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரான ரஞ்ஜித் மந்துமபண்டார நியமனம்
- பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹாசிம் நியமனம்
- நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக தலதா அத்துகோரல நியமனம்
- சமூக வலுவூட்டல் அமைச்சராக பீ. ஹரிசன் நியமிக்கப்பட்டுள்ளார்
- எஸ்.பி. நாவின்ன உள்நாட்டலுவல்கள மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நீர்ப்பாசன மற்றும் நீரியல்வள முகாமைத்துவம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சராக துமிந்த திஸாநாயக்க நியமனம்
- விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர நியமனம் பெற்றுள்ளார்.
- விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி , திறன்விருத்தி, தொழில்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சராக சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.
- பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
- உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்
இன்றைய அமைச்சரவை மாற்றத்திற்கு இணையாக, நாளை(02) இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் மாற்றம் நடைபெறும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார
More Tamil News
- சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார
- 11 தமிழர்கள் கடத்தல் : நேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன
- விசாக பூரணை பண்டிகையில் ஹட்டனில் பதிவான சோகம் சம்பவம்!
- மூதூரில் வேடிக்கை : பெண்ணைத் திருமணம் செய்த பெண்!
- பாம்பு புற்றில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் மக்கள்
- வெசாக் பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பலி : 7 பேர் படுகாயம்
- தாயையும் மகளையும் வெட்டிய வாள்வெட்டு குழு : யாழில் சம்பவம்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags: Cabinet reshuffle today, Cabinet reshuffle today
I needed to post you one very little word just to thank you as before for these great suggestions you have shown on this page. It is quite generous with you giving freely precisely what some people could possibly have advertised as an e book to get some money for their own end, primarily given that you might have done it if you considered necessary. The creative ideas as well served like the easy way to be aware that some people have similar eagerness similar to my very own to understand many more pertaining to this problem. Certainly there are many more pleasant situations in the future for those who scan your blog post.
Excellent post. I was checking continuously this blog and I am impressed! Very helpful info specifically the closing section 🙂 I handle such information much. I was seeking this particular information for a long time. Thank you and good luck.
how to use tinder , what is tinder https://tinderdatingsiteus.com/