போப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்!
Share

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான வத்திக்கானின் முக்கிய பொறுப்பில் கார்டினல் பெல் (வயது 76) என்பவர் உள்ளார். இவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ்ஸின் மூத்த உதவியாளர்களில் ஒருவர். இவர் அவுஸ்திரேலியாவில் பணியாற்றியபோது, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். Vatican treasurer surrenders court
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கார்டினல் பெல் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் சட்டப்படி சந்திப்பதற்கு வசதியாக விடுமுறையில் செல்ல கடந்த ஆண்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அனுமதி அளித்ததை தொடர்ந்து அவர் அவுஸ்திரேலியா சென்றார்.
அவர் மீதான வழக்கு, மெல்போர்ன் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
அப்போது அவர் மீது மஜிஸ்ரேட் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். அதற்கு கார்டினல் பெல் “நான் குற்றவாளி இல்லை” என்று சத்தமாக கூறி திட்டவட்டமாக மறுத்தார்.
இருப்பினும், இந்த வழக்கில் கார்டினல் பெல் மீதான சில குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் ஆதாரம் இருக்கிறது, ஏனையவற்றுக்கு ஆதாரம் இல்லை, எனினும் அவர் விசாரணையை எதிர்கொண்டாக வேண்டும் என்று மஜிஸ்ரேட் குறிப்பிட்டார்.
மேலும், விசாரணையின்போது கார்டினல் பெல் கைகளை கட்டிக்கொண்டு, உன்னிப்பாக நீதிமன்ற நடவடிக்கையை கவனித்தது குறிப்பிடத்தக்கது.
**Most related Tamil news**
- பிரான்ஸில், CRS அதிகாரி மீது தாக்குதல்!
- 1968 இல் நடந்த மே தின ஊர்வல புகைப்படங்கள்!
- எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு?
- எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி
**Tamil News Groups Websites**
Regards for this post, I am a big fan of this website would like to go on updated.