Type to search

சந்தர்ப்பம் பார்த்து வச்சு செய்யும் பிக்பாஸ் போட்டியாளர்கள்- அதிரடி திருப்பத்தில் பிக்பாஸ் வீடு!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Top Story

சந்தர்ப்பம் பார்த்து வச்சு செய்யும் பிக்பாஸ் போட்டியாளர்கள்- அதிரடி திருப்பத்தில் பிக்பாஸ் வீடு!

Share

வீட்டுக்குள்ளே இருந்த போட்டியாளர்கள், நீலம் மற்றும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து இரு அணியாக பிரிந்து கொண்டனர். ஒவ்வொருவரும், அவர் அணிந்திருக்கும் டி-ஷர்டில் வெவ்வேறு நபர்களின் புகைப்படம் இருந்தது. Tamil bigg boss season 2 task makes fun tamil news

கொடுமை என்னவென்றால், பனியனில் இருக்கும் நபர்களைப்போலத்தான் அவர்களது நடவடிக்கையும் இருந்தது. இதில் உச்சகட்ட நிலைக்குச் சென்றவர், டானியல்தான். அவரது டி-ஷர்ட்டில் யாஷிகாவின் புகைப்படம் இருந்ததால், தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதற்காக யாஷிகாவின் shorts ஐ யே அணிந்ததோடு அல்லாமல், இடுப்பு தெரியும் அளவுக்குப் டீ-ஷர்ட் ஐ சுருட்டிவிட்டிருந்தார்

இதற்கிடையில் பாலாஜியும் (டேனியல் பாத்திரம்) பொன்னம்பலமும் (மஹத் பாத்திரம்) கிச்சன் ஏரியாவில் பேசிக்கொண்டிருந்தார்கள். டேனியல் உருவத்தில் தத்ரூபமாக இருந்த நிலையில், இந்த இருவரும் அவர்கள் பேசும் மொடுயுலேஷனில் பேசி, சிரித்துக்கொண்டிருந்தார்கள். ‘டேய் மச்சான் நான் யார்கூட வேணாலும் சுத்துவேன் மச்சான், இவங்களுக்கு என்ன பிரச்னை’ என்று மஹத்தை அச்சுப்பிசுறாமல் இமிடேட் செய்து பேசிக்கொண்டிருந்தார் பொன்னம்பலம்.

அதற்குப் பாலாஜியும் ஈடுகொடுத்து, ‘அதேதான் மாமு. நீ யாரைப் பத்தியும் கவலைப்படாத. ஜாலியா இரு மாமே. யார் உன்னை என்ன கேட்கப்போறா’ என்று டேனியலைப் போலவே பதில் கூறிக்கொண்டிருந்தார் பாலாஜி.

இப்படி எல்லோரும் அவரவர் பனியனில் இருக்கும் பாத்திரமாகவே மாறி, ‘இதுதான் சாக்கு’ என்று தன் மனதில் வைத்திருந்த எல்லாவற்றையும் கேலிகளாகவும், காமெடியாகவும் பேசி ரகளை செய்துகொண்டிருந்தனர். இதில், அதிக அக்கப்போர் செய்தது டானியல்தான். யாஷிகா செய்யும் சுட்டித்தனம், பெண்களுக்கு உரிய நளினத்தில் அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தார்.

இது காணாது, வெட்கம் வேறு. பாலாஜிக்கு டானியலின் பாத்திரம் கொடுத்ததை, அவர் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். அவருக்கு இணையாக ஈடுகொடுத்தார், பொன்னம்பலம் (மஹத்). இப்படி மாறி மாறி இருவரும் பெர்போர்மன்ஸில் பின்னியெடுத்தனர்.

ஒரு கட்டத்தில், இருவரும் உக்கிரமாகி சண்டைபோடத் தொடங்கிவிட்டனர். ஆனால், பாலாஜி அவ்வப்போது பாலாஜியாக மாறி, சில மொக்கை ஜோக்குகளை அடித்ததுதான் சகித்துக்கொள்ள முடியவில்லை. இல்லை அதுவும் டானியலின் சுபாவமா என்பது சந்தேகமே!

இவர்கள் காரசாரமாக சண்டையிட்டுக்கொண்டிருக்க, நடுவில் ஜனனி தன்னை சென்றாயன் என நினைத்துக்கொண்டு, குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தார்.

காலை, இயல்பு நிலைக்குத் திரும்பிய அனைவரும், பல் துலக்கிக்கொண்டிருந்தனர். சென்றாயன், பாலாஜி, ஜனனி… மூவரும் டானியலை விடுவதாக இல்லை. ‘நிசப்தம் பிராண சங்கடம்!’ என்ற ரேஞ்சில் டானியலை வைத்து செய்துகொண்டிருந்தனர். இதில், டானியலுக்கு சிரிப்பு வந்ததுதான் ஹைலைட்டான விஷயம்.

ஆனால், இந்த டாஸ்க்கும் நன்றாகத்தான் இருக்கிறது. இவ்வளவு நாள் அழுகையும், ஆர்ப்பாட்டமுமாக இருந்த பிக் பாஸ் வீடு, இன்றுதான் ஜாலியாக நகர்கிறது. ஆனால், இந்த டாஸ்கிலும் சண்டை வரும் அபாயம் இருக்கிறது. உள்ளே அனைவரும் சீரியஸான சில விஷயங்களைத்தான் பேசிக்கொண்டிருந்தனர்.

ஆனால், ஒருவரைப்போல் மற்றவர் இமிடேட் செய்வதால், பார்ப்பதற்கு செம கூத்தாக இருக்கிறது. ஒட்டுமொத்த கூட்டத்திலும் டானியல்தான் பாவம். அனைத்து போட்டியாளர்களும் அவரையே டார்கெட் செய்து கலாய்த்து கொண்டிருந்தார்கள். இவரும் அதற்கு ஈடுகொடுத்து சமாளித்து கொண்டிருந்தார்.

‘இந்த உடல் அந்தத் தலையுடன் இணையப்போகிறது’ என்ற கதையாகத்தான் இருந்தது, இரவு டாஸ்க். அனைவரும் சொல்வதைப்போல, டானியல் மிகவும் புத்திசாலிதான். பயங்கரமான யுக்திகளையெல்லாம் கையாண்டு, ஃபைனலில் என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்.

டானியலை பிக் பாஸ் வீட்டுக்கு அழைத்தபோதே எல்லாவற்றையும் பிளான் போட்டுவிட்டார்போல! தற்போது உள்ளே நடக்கும் சில சூழலுக்கேற்ப, புதிதாக சில ஸ்கெட்ச்களையும் போட்டுக்கொண்டிருந்தார். அதனால்தான் இதுவரை டானியலின் பெயர் எவிக்ஷன் நாமினேஷனில் இதுவரை இடம்பெறவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

மஹத்துக்கு மும்தாஜின் பாத்திரம். அவரைப்போல உடையணிந்தது ஓகே! அதற்காக, சில விஷயங்களை எக்ஸ்ட்ராவாக அவர் செய்தது ஓவர் டோஸாக இருந்தது. ஒருவேளை இவர்களுக்கிடையே சண்டை மூண்டால், இதுபோன்ற விஷயங்களுக்காகத்தான் இருக்கும். ஒருவரின் மேனரிஸத்தைக் கிண்டல் செய்ய எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. நண்பனாகட்டும், டாஸ்க் ஆகட்டும். ஆனால், எவ்வளவுதான் குளோஸாக இருந்தாலும், டாஸ்க்காக இருந்தாலும், உருவத்தை வைத்து கேலி செய்துவது ரொம்பவே ஓவர்தான் பாஸ்!

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்க போகும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பொறுத்திருந்து பார்ப்போம்!

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்

Tags:

You Might also Like