அண்டாவிற்குள் பிணமாக கிடந்த 7 மாத குழந்தை- மாயமான தாய்!
Share

பண்ருட்டி அருகே வீட்டின் குளியலறையில் இருந்த தண்ணீர் அண்டாவில் மூழ்கிய நிலையில் 7 மாத குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. அந்த குழந்தை அண்டாவுக்குள் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனும் கோணத்தில் என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். Mother killed 7 month baby Cuddalore tamil gossip news
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், அவரது மனைவி ஜெயசித்ராக்கு 3 வயதில் மிதுன், 7 மாதத்தில் லட்சன் என்ற 2 ஆண் குழந்தைகள் இருந்தனர்.
வழக்கம்போல் சிலம்பரசன் வேலைக்கும், மிதுன் பள்ளிக்கும் சென்ற பின்னர், வீட்டில் 7 மாதக் குழந்தையுடன் ஜெயசித்ரா இருந்தார். இந்நிலையில் மதியம் வீட்டிற்கு வந்த சிலம்பரசன் தனது மனைவி மற்றும் குழந்தையை தேடியுள்ளார்.
அதன்பின்னர், சந்தேகத்தின் பேரில் வீட்டில் குளியலறையின் உள்ளே சென்று பார்த்த போது, மூடி வைக்கப்பட்ட நிலையில் இருந்த அண்டாவின் மேலே பழைய துணிகளும், அதன் கீழ் தண்ணீரும் இருந்தது. இதையடுத்து, துணிகளை நீக்கிவிட்டு பார்த்த போது, 7 மாதக் குழந்தை பிணமாக கிடந்துள்ளது.
ஆனால் அவரது மனைவியை காணவில்லை. இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த பொலிஸார் வீட்டை சோதனையிட்டதுடன், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் தாய் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயசித்ராவை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அவரை கண்டுபிடித்தால்தான், இதிலுள்ள மர்மம் விலகும் என்று பொலிஸார் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
ரித்விகாவுடன் நீச்சல் குளத்தில் நெருங்கி பழகியதால் கடுப்பான யாஷிகா!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
நள்ளிரவில் பெண்களோடு ஒரு கோலம், பகலில் இன்னோரு கோலம் கொள்ளும் மஹத் நீ வெளியே போ. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
எமது ஏனைய தளங்கள்