பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளர் இவர் தானாம்… லீக்கான பிக்பாஸின் திட்டம்!
Share

மும்தாஜ் – சென்ட்ராயன் ஆகிய இருவரில் ஒருவரே இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபற்றிய நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். Tamil Bigg boss 2 title winner announce Harathi
இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 9 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இதனால் இறுதியில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற தனது கணிப்பை நடிகை ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மும்தாஜ், சென்ராயன் இருவரில் ஒருவர் பிக்பாஸ் டைட்டிலை வென்றிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.
அதற்கு ஒருவர் ரித்விகா தான் டைட்டிலை வெல்வார், அதற்கான தகுதிகள் அனைத்தும் அவரிடம் இருப்பதாக பதிவிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த ஆர்த்தி, ”ரித்விகா எனது நல்ல தோழி. ஆரம்ப நாட்களில் அவர் பாதுகாப்பாக விளையாடினார். ஆனால், முதல் நாளில் இருந்து மும்தாஜ் முழு ஆற்றலுடன், மிகவும் வலிமையான போட்டியாளராக உள்ளார். அவர் எப்போதும் பாதுகாப்பாக இதுவரை விளையாடியதில்லை. மேலும், அவர் யாரையும் சார்ந்து இருக்கவுமில்லை,” என்று கூறியுள்ளார்.