கண்சிமிட்டலால் கைதான இளம் நாயகி…!
Share

ஒரே ஒரு கண் சிமிட்டலால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு எதிரான வழக்குகளை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. Actress Priya Prakash Varrier case file closed
ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில், புருவத்தை அழகாக அசைத்து கண் சிமிட்டி, ஒரே நாளில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்தப் பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்துவதாக இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிட கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.
இதற்காக அளித்த தீர்ப்பில், ப்ரியா பிரகாஷ் வாரியரின் நடிப்பு யார் மனதையும் புண்படுத்தவில்லை என்று கூறப்பட்டது. இஸ்லாமியத்தில் கண்சிமிட்டலுக்கு அனுமதியில்லை என மனுதாரர்கள் தரப்பு தெரிவித்தது. அதற்கு அது வெறும் பாடல்தான் எனக் கூறிய நீதிபதிகள், ப்ரியா வாரியர் உள்ளிட்டோர் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தனர்.