பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
Share

நடிகை சமந்தா தான் சம்பாதித்த பணத்தில் சமூக சேவை பணிகள் செய்கிறார். அந்த வகையில் ஆந்திராவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சைக்கு உதவினார். திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்று ஏழைகளுக்கு உதவுவதற்காக மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் உட்கார்ந்து காய்கறிகளை அவர் விற்று நிதி திரட்டினார். Actress Samantha selling vegetable Chennai market
நடிகை சமந்தா கையால் காய்கறி வாங்க பெரிய கூட்டம் கூடியது. காய்கறி கடைபக்கமே போகாத ரசிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என் பலர் திரண்டார்கள். அவர்கள் போட்டி போட்டு அதிக பணம் கொடுத்து சமந்தாவிடம் இருந்து காய்கறிகளை வாங்கினார்கள். சிறிது நேரத்திலேயே கடையில் இருந்த அனைத்து காய்கறிகளும் விற்று முடிந்தன. இதில் வசூலான முழு பணத்தையும் நலிந்த மக்களுக்கு சமந்தா வழங்குகிறார்.
சமந்தாவின் இந்த செயலானது திரையுலகையே வியக்க வைத்ததுடன், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.