நடிகையின் அந்த நடவடிக்கையால் சுட்டுக்கொன்ற பொலிஸார்… பரபரப்பில் திரையுலகம்…!
Share

பொலிஸார், மனநலம் பாதிக்கப்பட்ட ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை வெனஸா மார்குயஷ்சை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேசடினாவில் வசித்து வந்த இவர், தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவர், சமீபகாலமாக மனநிலை பாதிப்புக்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. Hollywood actress Venessa Marquez shot dead
சம்பவதினமன்று பொலிஸாருக்கு வீடு உரிமையாளர் போன் செய்து நடிகை தன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த பொலிஸாரையும் குறித்த நடிகை சுட்டுவதாக மிரட்டியுள்ளார். உடனே தற்காப்பு நடவடிக்கையாக நடிகையை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதன் பின்னர் அவரிடம் இருந்து துப்பாக்கியை பொலிஸார் சோதித்து பார்க்கும்போதே அது பொம்மைத் துப்பாக்கி என்பது தெரியவந்தது.
பொம்மைத் துப்பாக்கி என்று தெரியாமல் பொலிஸார் அவரைச் சுட்டுக் கொன்று விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டது.