எனக்கு தூக்கத்தில் அந்த பழக்கம் இருக்கு என ஒத்துக்கொண்ட முன்னணி நடிகை…!
Share

நடிகை சமந்தா நடித்துள்ள சீமராஜா மற்றும் யு-டர்ன் படங்கள் ரிலீசாக இருக்கின்றன. அதற்கான புரமோஷன் பணிகளில், படக்குழுவினருடன் இணைந்து நடிகை சமந்தாவும் பணியாற்றி வருகிறார். Actress Samantha married life success gossip
இந்நிலையில், ரசிகர்கள் கேள்விகளுக்கு டுவிட்டர் மூலம் பதில் அளித்தார் சமந்தா. அதில் ஒரு ரசிகர், ‘உங்களுக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருக்கிறதா?’ என்று கேட்க, அதில் பதில் அளித்துள்ள சமந்தா, ‘எனக்கு அப்படிப்பட்ட பழக்கம் கிடையாது. ஆனால், தூக்கத்தில் எப்போதுமே பல்லை கடிப்பேன்’ என கூறியுள்ளார்.
இன்னொருவர் இவரிடம் ‘திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது?’ என கேட்க, அதற்கு பதில் அளித்துள்ள சமந்தா, ‘திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் முந்தைய வாழ்க்கையை விட மேம்பட்டதாக இருக்க வேண்டும்; அந்த வகையில், திருமணத்துக்குப் பின், என்னுடைய வாழ்க்கை ரொம்பவே மேம்பட்டிருக்கிறது’ என்று பதிலளித்துள்ளார்..