உங்க அம்மாவை வந்து நான் மன்னிப்பு கேட்க சொன்னேனா…கொந்தளித்த பாலாஜி!
Share

இன்று பிக்பாஸ் வீட்டில் சென்றாயனை தலைமுடிக்கு சிவப்பு கலர் அடிக்குமாறு ஐஸ்வர்யா கன்வின்ஸ் பண்ணனும். அப்பிடி அவர் கலர் அடித்தால் ஐஸ்வர்யா அடுத்த வார நாமினேஷனிலிருந்து காப்பாற்றப்படுவார். ஆனால் அந்த உண்மையை சொல்லாமல் நீங்கள் கலர் பண்ணினால், நாமினேஷனிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவிங்க என்று சென்ராயனிடம் ஐஸ்வர்யா பொய் சொல்கிறார். Bigg boss 2 Aiswarya fight withh Balaji gossip
இதனால் பிக்பாஸ் வீட்டிலுள்ள சக போட்டியாளர்கள் கோபப்படுகின்றனர். இதன்போது பாலாஜிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அதன்போது பாலாஜியிடம் நீங்கள் என் முன்னாடி என்ன பேசுகிறீர்கள் பின்னால் சென்று என்ன பேசுகிறீர்கள் என்பது தனக்கு நன்றாக தெரியும் என ஐஸ்வர்யா கூறுகிறார். இதனால் மிகவும் கோபமான பாலாஜி, உன் பின்னால் நான் என்ன பேசினேன் என கேட்கிறார்.
அதன்போது தன்னுடைய அம்மா வந்து மன்னிப்பு கேட்டதை சுட்டி காட்டி பேசுகிறார் ஐஸ்வர்யா. இதற்கு பாலாஜி உங்க அம்மாவை வந்து நான் மன்னிப்பு கேட்க சொன்னேனா…? ஒருவேளை உங்க அம்மா வந்து மன்னிப்பு கேட்டது பிடிக்கவில்லை என்றால், யார் இவங்க ஏன் மன்னிப்பு கேட்குறீங்க என கூற வேண்டியது தானே..? இந்த பிக்பாஸ் கேட்டை தாண்டி போய்விட்டால் எல்லோரும் வேறு வேறு தான் என கூறுகிறார்.
ஏற்கனவே ராணி மகாராணி டாஸ்கில் மூலம் கோபமான ஐஸ்வர்யா மீது ஏகப்பட்ட கோபத்தில் இருக்கும் ரசிகர்கள், இதனால் அதிக கோபமடைந்ததுடன், இந்த வாரம் எப்பிடியாவது இவரை வெளியேற்றியாக வேண்டும் எனும் முடிவுடன் இருக்கின்றனர்.
இந்த வார இறுதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்…