சூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்!
Share

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை திருமணம் செய்து கொள்வதற்காக ரசிகை ஒருவர் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். 24 year old girl came Salman house forr marry gossip
அஜித், பிரசாந்த் போன்ற நடிகர்களின் அழகை பார்த்து அவர்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ரசிகைகள் வீட்டை விட்டு ஓடி வந்த சம்பவங்கள் நடந்துள்ளது. அதுபோல் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு நடந்துள்ளது. 52 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக உள்ளார்.
சமீபத்தில் பந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்குள் குசும் என்ற 24 வயது இளம்பெண் நுழைய முயற்சி செய்துள்ளார். இதனால் அவரிடம் விசாரித்தபோது, அவர் சல்மான் கானின் தீவிர ரசிகை எனவும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அதை சல்மானிடம் நேரில் சொல்லவே அங்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவரை மேலும் விசாரித்ததில் அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது.