அடுத்த வாரம் நாமினேஷனின்றி நேரடியாக வெளியேற்றப்படுவார் ஐஸ்வர்யா- கமல்!
Share

போன வார டாஸ்க்கில் ஐஸ்வர்யா, செண்ட்ராயனை ஏமாற்ற கூறிய அடுக்கடுக்கான பொய்கள் ஒவ்வொன்றாக போட்டு வாங்கிய கமல்ஹாசன் நிகழ்ச்சியை வழமையை விட விறுவிறுப்பாக கொண்டு சென்றார். Bigg boss 2 Kamal haasan blamed Aishwarya
கமல்ஹாசன் இந்த சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் அடுக்கடுக்கான பொய்களை ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வந்தார். மேலும் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக இருந்த மும்தாஜ் மற்றும் யாஷிகாவையும் அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டு போட்டு தாக்கினார்.
கமல்ஹாசனின் தொடர்ச்சியான அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் கதறி அழத்தொடங்கினார். மொத்தத்தில் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காதவர்கள் அனைவருக்கும் இன்றைய நிகழ்ச்சி ஒரு கொண்டாட்டமாக இருந்தது.
ஆனால் பிக்பாஸ் ஐஸ்வர்யாவை மீண்டும் காப்பாற்றி செண்ட்றாயனை வெளியேற்றிய சம்பவம் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான் ஞாபகம் வருகிறது.