பாலாஜிக்கு இவர் மீது எப்போதும் ஒரு கண்ணாம்… அதனால் நித்யா எடுத்த முடிவு இதோ!
Share

பிக்பாஸில் விஜி மீது எப்போதும் முன்னெச்சரிக்கையாக தான் ஒரு கண் வைத்திருப்பதாக பாலாஜி தெரிவித்துள்ளார். Bigg boss 2 Balaji fear forr vijayalakshmi
வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸிற்குள் வந்தாலும், ஒவ்வொரு டாஸ்க்களையும் தனித்தன்மையோடு விளையாடி பார்வையாளர்களிடம் பாராட்டுகளை அள்ளி வருகிறார். அதே சமயம் சக போட்டியாளர்களைப் பற்றி புறணி ஏதும் பேசாமல், நேரடியாக தன்னை வம்பிழுப்பவர்களை ஒரு கை பார்ப்பது என விஜியின் நடவடிக்கைகள் பார்வையாளர்களாலும், சக போட்டியாளர்களாலும் பாராட்டும்படி உள்ளது.
இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆறு போட்டியாளர்களில் யார் இரண்டு பேர் இறுதிச்சுற்றுக்குச் செல்லத் தகுதியானவர்கள் இல்லை என ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும் என்ற டாஸ்க்கை பிக் பாஸ் அளித்தார்.
அப்போது பேசிய பாலாஜி, வந்த நாள் முதல் துறுதுறுப்பாக இருப்பதாக விஜியைப் பாராட்டிய அவர், ஏற்கனவே வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு வாழும் நிலையில் இவர் வேறு என்னென்ன செய்யப் போகிறாரோ என தான் அஞ்சியதாகக் கூறினார்.
அதோடு, டாஸ்க் என பிக் பாஸ் அறிவித்ததுமே உடனடியாக தயாராகி விடுவார் எனவும் கூறிய பாலாஜி, இதனாலேயே அவர் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பதாகக் கூறினார்.