இந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்!
Share

ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமியின் தலையை தனியாக வெட்டி தலையுடன் வீதியில் நடந்த மதுவருந்திய ஆசாமியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 27 year old man cut girl’s head
தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல்-சின்னப்பொண்ணு தம்பதியின் மகள் ராஜலட்சுமியை அதே பகுதியிலுள்ள 27 வயதான கார்த்தி என்பவன் அடிக்கடி சீண்டிக்கொண்டிருந்துள்ளான். சம்பவ தினத்தன்று தனியாக வீட்டிலிருந்த ராஜலட்சுமியை நிறைந்த குடிபோதையுடன் இருந்த கார்த்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். உடனே ராஜலட்சுமி சத்தமிட்டதால் கோபமடைந்த அவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜலட்சுமியின் தலையை தனியாக வெட்டி வீதியில் சென்றுள்ளான்.
இதையறிந்த கார்த்தியின் மனைவி வீட்டில் மறைந்திருந்த கணவரை பொலிஸில் பிடித்து கொடுத்துள்ளார். கார்த்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை இடம்பெற்று வருகிறது.