என்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா? நடிகர் சிவகுமார் விளக்கம்
Share

நடிகர் சிவக்குமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, அவர் விளக்கம் அளித்துள்ளார்.(Actor Sivakumar selfie controversy kisu kisu )
மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்புவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகரும், நடிகர்கள் சூர்யா,கார்த்தியின் தந்தையுமான சிவக்குமார் கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகர் சிவக்குமாரை காண ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் கூடியிருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் சிவக்குமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது, ஆத்திரமடைந்த சிவக்குமார், திடீரென அந்த நபரின் கையில் இருந்த செல்போனை தட்டிவிட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டு நடிகர் சிவகுமாரின் இந்தச் செயலை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நடிகர் சிவக்குமார் தனது தரப்பு விளக்கத்தினை தெரிவித்துள்ளார்.
அதில், ‘செல்ஃபி எடுப்பது தனிநபர் விருப்பம். குடும்பத்துடன் வெளியே செல்லும்போதும், ஊட்டி, கொடைக்கானல், தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தளங்களில் செல்ஃபி எடுக்கலாம். பொது இடத்தில் இடையூறு விளைவிக்கும் விதமாக செல்ஃபி எடுப்பது தவறு. காரில் இருந்து இறங்கி விழா மண்டபத்திற்கு செல்வதற்கு முன்பே எனது பாதுகாவலர்களை தள்ளிவிட்டுவிட்டு வரிசையாக பலர் வந்து செல்ஃபி எடுத்து எனக்கு இடையூறு அளிப்பது சரியா?
என்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா? விஐபி என்றால் எப்படி வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாமா? நான் ஒன்றும் புத்தன் அல்ல. எல்லோரையும் போல ஒரு மனிதன் தான். எனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். என்னை தலைவனாக ஏற்றுக் கொண்டு என்னை பின்பற்றுங்கள் என்று நான் யாரிடமும் கூறியதில்லை. ஒவ்வொருவரும் அவரவருக்கு ஹீரோக்கள் தான். மற்றவர்களை எந்தளவிற்கு துன்புறுத்துகிறோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்
வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com