பாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்
Share

இந்தியாவில் பலாத்காரத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.(Rakhi Sawant support MeToo Controversy )
இயக்குனர் சஜித் கான் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து அவர் இயக்கி வந்த ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்து வந்த அக்ஷய் குமார் படப்பிடிப்பை நிறுத்தினார். மேலும் பாலியல் புகாரில் சிக்கிய நானா படகேர் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில் நானா படேகரின் ஆதரவாளரான ராக்கி அக்ஷய் குமாரை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
நான் அக்ஷய் குமார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் ஹவுஸ்ஃபுல் 4 படப்பிடிப்பை நிறுத்தியதை பார்த்து அப்செட் ஆகிவிட்டேன். அவர் இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
நானா படேகர் மற்றும் சஜித் கான் ஆகியோர் அப்பாவிகள். இளம் வயதில் எதுவும் செய்யாத ஆலோக் நாத்தால் வயதான காலத்தில் எதுவும் செய்ய முடியாது. அவர் நல்லவர். வின்டா நந்தா ஊதினாலே ஆலோக் நாத் பறந்துவிடுவார். அந்த அளவுக்கு வின்டா குண்டாக இருக்கிறார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவர். அவர்கள் பெண்களுடன் பேசினால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்.
திரையுலகில் ஆண்கள் அல்ல மாறாக பெண்கள் தான் மோசமான விஷயங்களை பரப்புகிறார்கள். என் ரசிகர்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு தற்போது அவர்களை பிடிக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் தனுஸ்ரீ தத்தாவை ஆதரிக்கிறார்கள். தனுஸ்ரீ தத்தாவை ஆதரிக்கிறவர்களை சபிக்கிறேன்.
இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தை நிறுத்த வேண்டும் என்றால் முதலில் படங்களில் பலாத்கார காட்சிகள் வைக்க தடை விதிக்க வேண்டும் என்கிறார் ராக்கி. பாலியல் புகாரில் சிக்கிய ஆண்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதுடன் புகார் கூறிய பெண்களை அசிங்கப்படுத்தியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.